இயக்கமும் இருப்பும்
![](https://eluthu.com/images/loading.gif)
பகலிரவாகியும் இரவு பகலாகியும்
நாட்களைத் தின்று உருள்கையில்
நீயும் நானும் நடுவில்
தீண்டிச் சீண்டிக்
கரைந்து கொண்டிருக்க
இன்னுமொரு விடியலும்
அரைத்ததையே அரைப்பதாக
இருக்க வேண்டாமென்கிறது
இயக்கமே அடிப்படையான இயற்கை
தேவையென்கிறது இருப்பே
சகலமுமான வாழ்க்கை.