எம்பேரு குப்ரியா

அடியே சுப்ரியா நீயும் இந்தக் கல்லுரியிலே தான் சேந்திருக்கிறாயா? ரொம்ப மகிழ்ச்சிடி. ஓரே பள்ளிலே படிச்சோம் . இப்போ ஒரே கல்லூரியிலே படிக்கப்போறோம்.

அடியே குப்பாயி, நீ எப்படி இங்கே சேந்தே?
அடியே சுப்ரியா நான் பள்ளிலே படிக்கிறவரைக்குந்தான் குப்பாயி. கல்லூரியிலே சேர்றதுக்கு முன்னாடியே எம்பேரக் குப்ரியான்னு மாத்திட்டேன். இப்பெல்லாம் தமிழ்ப் பேரு வச்சிட்டு இருக்கறவங்கள யாரடி மதிக்கறாங்க.

நீ சொல்லறதும் சரிதாண்டி குப்ரியா.

எழுதியவர் : மலர் (2-May-15, 9:41 pm)
பார்வை : 300

மேலே