கணிதகவிதை அம்மா a=b , b=c = a=c
தேற்றம் :
அம்மா என்றால் கடவுளின் அன்பு என்று அர்த்தம் நிரூபிக்க ?
சூத்திரம் (a=b , b=c => a=c)
அம்மா என்றால் அன்பு என்று அர்த்தம்
மனைவி என்றால் துணைவி என்று அர்த்தம்
பிள்ளை என்றால் பாசம் என்று அர்த்தம்
காதலி என்றால் காதல் என்று அர்த்தம்
காதல் என்றால் காத்திருப்பு என்று அர்த்தம்
பாசம் என்றால் பராமரிப்பு என்று அர்த்தம்
துணைவி என்றால் ஏதிர்பார்ப்பு என்று அர்த்தம்
அன்பு என்றால் அரவனைப்பு என்று அர்த்தம்
அரவனைப்பு என்றால் மன்னிப்பு என்று அர்த்தம்
ஏதிர்பார்ப்பு என்றால் ஆசை என்று அர்த்தம்
பராமரிப்பு என்றால் செலவு என்று அர்த்தம்
காத்திருப்பு என்றால் சோர்வு என்று அர்த்தம்
சோர்வு என்றால் கவலை என்று அர்த்தம்
செலவு என்றால் குழப்பம் என்று அர்த்தம்
ஆசை என்றால் தேவை என்று அர்த்தம்
மன்னிப்பு என்றால் தியாகம் என்று அர்த்தம்
தியாகம் என்றால் என்மீது நம்பிக்கை என்று அர்த்தம்
தேவை என்றால் தருவது அம்மா என்று அர்த்தம்
குழப்பம் என்றால் தீர்வு அம்மா என்று அர்த்தம்
கவலை என்றால் ஆறுதல் அம்மா என்று அர்த்தம்
அம்மா என்றால் வாய்ப்பு என்று அர்த்தம்
அம்மா என்றால் பாதுகாப்பு என்று அர்த்தம்
அம்மா என்றால் மகிழ்ச்சி என்று அர்த்தம்
அம்மா என்றால் உணர்ச்சி என்று அர்த்தம்
அம்மா என்றால் அகலம் என்று அர்த்தம்
அம்மா என்றால் உயரம் என்று அர்த்தம்
அம்மா என்றால் வியப்பு என்று அர்த்தம்
அம்மா என்றால் படைப்பு என்று அர்த்தம்
இப்பொது இருந்து,
அன்புதான் கடவுள் என்றால்
அந்த கடவுளின் அன்புதான் அம்மா என்று அர்த்தம்
தேற்றம் நிரூபிக்கபட்டது