கூந்தல் இருக்கட்டும்
கருப்பாக இருக்கட்டும்....
பிறந்த மகவு கவ்வும்
தாய் முலை....
தரை தொடும் அளவு
வளர ஆசைப்படும்
கூந்தல் இருக்கட்டும்
ஒரு வெள்ளை நிறம் கூட இல்லாமல்
கருமையாக....
எடுக்கும் ஆடை எல்லாவற்றிலும்
ஏதாவது ஒரு இடத்தில்
கருமை நிறம் இருக்க வேண்டும்
அதுவே ஆடைக்கு அழகு....
அணிவோர் கருத்து....
எல்லாவற்றிலும் கருமை நிறம் விரும்பிகள்
கன்னிப்பெண்ணின் நிறம் கருப்பு என்றால் மட்டும்
ஏன் பெரிய விலை பேசுகிறார்கள்
விருப்பமில்லாமல்
விருப்பத்துடன்....
பணம் வேண்டி...
அழித்து விட கருப்பு என்ன
காகிதத்தில் எழுதிய எழுத்தா??
பேதைக்கு கடவுள் அளித்த பரிசு....