ஆய்வகத்தில் வந்த சிரிப்பு

கன்னக்குழியோ
சிவந்த உதடோ
துள்ளு மான் நடையோ
அரிசிப் பற்களோ
கற்றைக் கூந்தலோ
எனக்கிருக்காது..

அழகான மீசையோ
மீசையில்லா அழகோ
கவரும் தாடியோ
சாகச வித்தையோ
புஜ பலசாலித்தனமோ
என்னிடமிருக்காது..

ஏறிய தலை முடியோ
முன் நீண்டப் பற்களோ
எண்ணெய் வழியும் முகமோ
ஒல்லியான தேகமோ
கலையில்லா கருப்போ
எனக்கிருக்கும்..

மேல்
சொன்ன
ஐந்தும்
எனக்கும்..

எல்லா வகுப்பறையிலோ
கூட்டமான கடைவீதியிலோ
பேருந்தில் கூட்டத்திலோ
அங்கோ இங்கோ
இங்கோ அங்கோ
குறைந்தபட்சம் ஒருவராவது
நானாக இருப்பேன்..

பின் பார்த்து
முன்வேகமாய் வந்து
பின் திருப்பலாம்
சிலர் முகத்தை

பேசும் வரை பேசி
போன பின் நான்
மொக்கை ஆகலாம்
சிலருக்கு.

பார்த்த வரை பார்க்காமல்
சிலர் தவறவிட்ட ஒன்றை
நான் சுட்டிக்காட்ட நெருங்கும்போது
ஐயயோ என மறையலாம்..

என்னை நினைத்து
ஒரு நேரம்
அழுகை வந்தபோது
ஆய்வகத்தில்
எலும்புக்கூடை
பார்க்க நேர்ந்து
அச்சிலரை நினைத்து
சிரிப்பு வந்தது..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (3-May-15, 3:34 pm)
பார்வை : 78

மேலே