காதல் முன்பதிவு
கட்டுமரம் மிதக்குதடி
கடலின் நடுவிலே தினம்
எந்தன் மனம் துடிக்கதடி
உந்தன் நினைவிலே.....
நிலவுக்குத்தான் சொந்தமா நீ
அழகின் வடிவிலே
மலர் தேசத்துக்கே பந்தமா நீ
உறவின் முறையிலே
கதிரவனின் ஒளியில் நீயோ
மலர்ந்த பூவிதழ்
இரு கண்கள் கொண்டு என்னை
வெல்ல பிறந்த பொன்மகள்
உன் புன்னகையால் எந்தன் வாழ்வை
வசந்நம் ஆக்கினாய்
அன்பு நினைவுகளால் உள்ளத்தையே
சொர்க்கம் ஆக்கினாய்
கவி அமுதாய் தினம் தோன்றி
கவிதை பாடினாய்
உன் கண் இமையால் என் மனதை
சூறை ஆடினாய்
அன்னம் போல என் மனதில்
வளம் வருகிறாய்
என் அன்னை போல அன்புதனை
அள்ளி தருகிறாய்
ஊமை விழி பார்வையினால்
காதல் சொல்கிறாய்
எந்தன் உயிர் உனக்கென முன்பதிவு செய்கிறாய்.................