தோழிக்கு என் கடிதம்

என்ன மாயமடி தோழி...
என் வாழ்வில் வந்த முதல் பெண்ணடி நீ...
என் விட்டு அடுப்படி வரை உரிமையுடன் செல்லும்..
என் ஒரே தோழமையடி....
என் உயிர் தோழியடி....
இது உனக்கான என் கடிதம்....

இரு தாய் பிள்ளையாக பிறந்தும்...
ஒரு தாய் பிள்ளைகளாய் வளர்ந்தது..
நம் நட்பான காதல்...

நம் தோழமையின் நேருக்கத்தை கண்டு....
இவ்வுலகம் தவறாக பேசியும்....
நம் நட்பின் ஆழம் நமக்கு தெரியும்....
ஊரை பற்றி எனக்கு கவலை இல்லை.....
உன் நட்பு ஒன்றே போது என்று என்னுடன் இருந்தாய்.....

ஊர் வாயை அடைக்க உன்னை விட்டு விலகினேன்...
பிரிவினால் நம் நட்பு குறையவில்லை...
யார் கவனிப்பும் இல்லாமல் வளரும்...
காட்டு மரம் போல் வளரவே செய்தது...

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓர் சந்திப்பு......
சூரிய உதியத்திற்கு காத்திருக்கும் சூரியகாந்தியை போல்...
மீண்டும் மலர்ந்தது நம் நட்பான காதல்..

என் அக்கா திருமணத்தில் நிகழ்ந்தது நம் சந்திப்பு...
உன்னை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற அசையில்...
ஓர் வருடம் முன்பு...
அவள் இடம் தான் உன் தொலைபேசி எண் கேட்டேன்...
அன்று அவள் இல்லை என்றால்....

நான் உன் எண்ணை கேட்ட தினம் இன்றும் என் நினைவில் உண்டு.....
உன் எண்ணை கேட்ட பின்பு தான்.....
என் நினைவுக்கு வந்தது அன்றைய தேதி....
உலகமே கொண்டாதும் நாள் அது....
உலக காதலர் தினம் அன்று....

அவள் நம்மை பற்றி என்ன நினைத்து இருப்பால்....
இதை உன்னிடம் கேட்டேன் அன்று....
நம் உண்மை நட்பு அவள் அறிவாள் என்றாய்....
உன் பதிலை கேட்டு திகைத்து தான் போனேனடி....

உன்னிடம் பகிர என்னிடம் அன்று இருந்தது...
அந்த தினமும் உன் நினைவின் வலிகளும் மட்டுமே தோழி.....

நியோ நீ பூப்பெய்திய தினத்தன்று...
நம் நண்பர்கள் அனைவரும் வந்தும்..
நான் வரவில்லை என்று நொந்து கொண்டாய்....

என்னை போன்றே உருவம் கொண்ட ஒருவனிடம்...
உனக்கு ஏற்பட்ட ஈர்ப்பினையும்.....
இன்று வரை அவன் பிறந்தநாளன்று...
மறக்காமல் வாழ்த்து செய்தி அனுப்புவதாய் சொன்னாய்.....

பாத்தாம் வகுப்பில் நீ கொண்ட காதலையும்..
காதலுக்காக உன் குடும்பத்தை வருத்தியதையும்...
சொல்லி வேதனைபட்டாய்...
கடைசியில் என் நினைவுகள் மட்டும்...
என்றும் நீங்கா ஒன்று என்றாய்.....

அன்று நள்ளிரவு வரை பேசியும் போதவில்லை.....
அடுத்த நாள் உன் வீட்டிற்கு ஒரு பயணம்....

உன்னுடன் தனிமையில்......
உன் படுக்கை அறை வரை அனுமதித்து...
நம் நட்பின் மீதான..
அவர்களின் நம்பிக்கையை வெளிபடுத்தினார்..
உன் அம்மா.....

உன் பழைய புகைபட ஆல்பமை கட்டினாய்....
அதில் நம் சிறுவயது படங்களும் இருந்தன....
நம் சிறுவயதின் மறக்க முடியா நினைவுகளை தந்துச்சென்றன....

அடுத்து நீ உன் காதலுக்காக செய்த..
முட்டாள்தனமான செயல்களை சொன்னாய்....
உன் ரத்ததில் ஏழுதப்பட்ட காதல் கடிதத்தை காட்டினாய்.....

அந்த நாட்களில் உன்னுடன் இருக்க தவறிவிட்டேன்.....
என்னை மன்னிப்பாயா தோழி.....
இனி என்றும் உன்னுடன் இருப்பேனடி...

உன்னுடன் பேசும் அந்த நிமிடங்களில்....
என் கஷ்டங்களும் ஓடி ஒழிந்து கொள்கின்றது....
என் உயிருடன் கலந்த....
என்னவளின் நினைவுகளின் வலிகளும் இல்லையடி.....

என்னிடம் நீ ஏதும் மறைக்கவில்லையடி.....
அனால் நானோ என் காதலையும்....
அதில் நான் கண்ட காயத்தையும் மறைத்துவிட்டேனடி.....

இந்த கடிதம் இத்துடன் முடியவில்லை...
இனி என் வாழ்கை பயணம் முடியும் வரை...
உனக்கான என் கடிதங்கள் தொடரும்..........

எழுதியவர் : சீனி (4-May-15, 5:31 am)
பார்வை : 5287

மேலே