மனமே ஓ மனமே
இணைந்து வளர்ந்தவனே
என்னை இயக்க முடிந்தவனே
உன்னை மறந்து ஒரு செயல்
செய்ய முடியுமா என் மனமே!
ஒரு சமயம் நீ மகிழ
பல சமயம் நான் தவற
உன்னாலே சில முறை ஜெயிக்கவும்
பல முறை தோற்கவும் ஆகுதே !
அது என்னோட பலவீனமா
இல்லை உன்னோட பெரும்பலமா
நடப்பது எல்லாமே உன் வழிதான்
பழி எல்லாமே என்னோடு தான் !
கரும்பு ஆலை சக்கை மாதிரியே
என்னை நீ இழுத்து போடுகிறாய்
ஒரு நொடியும் ஓய்ந்து நிற்காமல்
அலைந்து கொண்டு இருக்கும் என் மனமே !
காலமெல்லாம் உன்னை அடக்க
முடியாத மனிதனென்று என்னை
யாரும் பேசுகின்ற பேச்சு ஒன்று
மறையாமல் இருக்கிறதே!
இது எந்நாளும் நல்லதில்லை
உன்போல அதிகாரி யாருமில்லை
நீ அடங்கும் படி நான் மாறும் வரை
தவம் நானும் செய்ய வேண்டும் என்மனமே!