சுஜாதா பிறந்தநாள் கவிதை
என்
கல்லூரி பருவத்தில்
கணினி எனும் கடலில்
தமிழ் மொழிப் படகேற்றி
தரை சேர்த்து விட்டவனே!
கோலி யாடும் பருவத்தில்
"கோபால்" சொல்லித் தந்தவனே!
காதல் வரும் வயதில்
கணினி எனும் கவிதை
கற்றுத்தந்தது நீ தானே!
உன் இலக்கியச் சமுத்திரத்தில்
ஒரு ஓரம் குளித்தவன் தான்
இன்று வரை ஈரத்துடன் நான்!
என் இளம்பருவத்தில்
உன் முகம் கண்டவன்
அதனால்
அறி(வியல்)முகம் பெற்றவன்!
புதுப்புது புதினம்
புரிந்தவன் நீ !
புதிதாய் தமிழுக்கு
தந்தவன் நீ !
பொறியியல்,புதினம்,இலக்கியம்
மூன்றுமே
உனக்கு சிறப்பிடம்!
மூன்று....மே
உனது பிறப்பிடம்.......
வாழ்க உன் புகழ் !!!!!