புரட்டிப் போடும் பொல்லாத காதல் - 12176

ஒட்டகப் பாதமே
ஒத்தடம் கொடுக்க
பாலையின் மேனிவலி
பதமாக தணியும்.....
ஜடப் பொருளென்று
ஒன்றுமில்லை
ஜனித்ததே மனசில்
காதல்..........! அதனால்.....
சொட்டை மண்டையில்
கத்திரி வெய்யில்
சுடவில்லை - அது
நிலவொளியின்
விரல் வருடலே.....!