அழகான ராட்சஸி--- அரவிந்த்

என்னவளே...
என் தோளில்
நீ சாயும் தருணம்,
தொலைந்து போகிறேன்..
என் மடியில்
நீ உறங்கும் தருணம்,
என்னையே
மறந்து போகிறேன்..
என் கைகளை
உன் விரல்களுக்குள்
புதைத்து விடுகிறேன்...
உன் கையை விடுவித்து
பிரியும் தருணம்
இறந்து பிறக்கிறேன்...
உன் இரு கண்களில்
பிறப்பின்
அர்த்தம் ஆகிறேன்...
என் அருகில்
நீ இருக்கையில்
என் தாயை உணர்கிறேன்...
உன் நேசத்தின்
உச்சி கண்டு
நெகிழ்ந்து போகிறேன்...
உன் கோவத்தின்
முதல் பாதியிலே
மடிந்து போகிறேன்...
உன் திமிரை
ரசித்து நிற்கிறேன்
அழகும் ஆக்ரோஷமும்
இணையும் ஒரு மையப்புள்ளியை
உன்னில் காண்கிறேன்...!