குடி குடியைக் கெடுக்கும்

கேளிக்கை விருந்தில்
கேட்பார் பேச்சைக்
கேட்டு
முதலில் எனை
தொட்ட போது
நட்பை கொண்டாடி
வீட்டை மறந்தாய்!...
இரண்டாம் முறை
எனை
பார்த்த போது
உனையே மறந்தாய்
எனை தொட விளைந்தாய்!...
ஒரே குவளை எனும்
கட்டுப்பாட்டோடு தொட்டாய்
எனை!...
மறுமுறையும் எனை
நாடினாய் இப்போது
கட்டுப்பாடில்லை
கவலை மறக்க என
பல குவளையை
கையில் ஏந்தினாய்!...
அகிலமும் மறந்தாய்
தரை கடலில் நீச்சல்
பயின்றாய்!...
நித்தமும் தொடர்ந்தது
உறவுகள் ஊதாரி
என்றது!...
மனைவி மன்றாடினாள்!
பெற்றோர் கதரினர்!
குழந்தைகள் ஏக்கத்தோடு
உறைந்தனர்!...
ஊற்றிக் கொடுத்த நண்பனும்
மதிக்கவில்லை...
வாங்கிக் கொடுக்கும்
சிறுவனும்
மதிக்கவில்லை!...
இருப்பினும் நீ எனை
விடுவதாய் இல்லை!...
வாழ்வது மாழிகைதான்
ஆனால்,
வீழ்ந்து
எழுவது
வீதியல்லவோ!...
இனியும் நீ எனை
தொடாதே பருகும்
பானம்
குறையும் நேரம்
உன் ஆயுளும்
குறைவதென்பதை
உணர்!...
எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டோரை
கூட
எஞ்சியோர் அன்பு
செய்வர்
போதையால்
புத்தி
பேதளித்த
உனை என்றும்
புறம்
தள்ளியே
வைப்பவர்...
விழி...
வாழும் சில காலம்
மனைவியை
மகிழ்ச்சி படுத்து!
குழந்தைகளுக்காய்
வாழ்!...
பெற்றோரும்
உறவினரும்
மெச்சும்படி நட...
நான் (மது)உயிருக்கும், வீட்டுக்கும்
நாட்டுக்கும் கேடு...
எனினும் அரசின் நலனிற்க்காய்
மக்கள் எக்கேடு
கெட்டால் என்ன?
எவன் வீடு எரிந்தால்
என்ன?

எழுதியவர் : கிருபானந்த் (5-May-15, 9:18 pm)
பார்வை : 282

மேலே