புரிதல்

புரிந்தது இல்லை!

என்முன்னே இலைவிரித்து,
எண்ணங்களை விருந்திட்டு ,
என் கேள்விகளை அசைபோடும்,
மனக்கடலின் பசிதாகம்
எதுவரை என
புரிந்ததில்லை!

HEADSET காதுகளுக்குள்
விரியும் 'தனி உலகம்'
எந்த BIGBANG பிள்ளையென்று
இன்று வரை
புரிந்ததில்லை!

கணவனின் நலம்நோக்கி
காணும் கடவுளெல்லாம்
கைகூப்பும் மனைவியின்,
"INNOCENT எழில்காதல்"
பெண்மனதில் கால்வைக்கும்
பொழுதுகள்
புரிந்ததில்லை!

கிரகங்களை பிணைத்திருக்கும்
புவிஈர்ப்பு விசைகூட,
சிறு துளி கண்ணீரை
இழுப்பதிலே தோற்றுவிடும்
நண்பனது தோள்களின்
இயற்பியல்
புரிந்ததில்லை!

உறவுக்கும் , உணர்வுக்கும்
காலம் மாற்றும் அர்த்தங்களை
மீண்டும் புதியதாய்
EDIT செய்ய இடமளிக்கும்
வாழ்க்கை DICTIONARY இன்
தாராளம்
புரிந்ததில்லை!

IMPERFECTION உண்மைகளை
வீதியினில் விற்றுவிட்டு
கேட்டு சிலாகிக்கும்
ரம்மியபக்கம் கொண்டே
உறவு புத்கத்தை
ஒருவாறு நிரப்புகின்ற
வாழ்க்கை உக்திகள் ஏனோ
வயது வந்தும்
புரிந்ததில்லை!

காதலெனும் கடவுளினை
முழுவதுமாய் கண்டிராத
18+ இளமையின்
ஆத்திகம்
புரிந்ததில்லை!

அரை இட்லியில் பசியாறும்
அன்னையெனும் அதிசயம்
ஆண்பாலாய் பிறக்காத
காரணங்கள்
புரிந்ததில்லை!

சுயநலத்தை சுவீகரிக்கும்
பதவிகள் புரிந்ததில்லை!

முதுமையின் முகம்பார்க்கையில்
இளமை ஏனென புரிந்ததில்லை!

உறவு தீண்டா இளைஞர்களின்
உஷ்ணங்கள் புரிந்ததில்லை!

விலைமகள் மனதின்
வெறுமைகள் புரிந்ததில்லை!

நட்புக்கும் காதலுக்கும்
நேரமில்லா
நெஞ்சங்கள்
TOPPER உலகில் தவிப்பது
ஏனென புரிந்ததில்லை!

புரிந்து கொள்ளாமலே
போய்கொண்டிருக்கும்
பொதுவான ஒரு பயணத்தில்,
புரியாமல் போன
பொக்கிஷங்கள் எல்லாம்,
புரிகின்ற ஒருநாளில்,
நினைவுகளில் கல்உடைக்கும்
ஊழியனாய் நாமும்
ஒடிந்திருக்க கூடும்;

எச்சரிக்கை தான்!

ஏனெனில்.,

"முதுமையில் கல்லுடைத்தும்,
புதைந்து விட்ட பொக்கிஷங்கள்
என்றும் புலர்வதே இல்லை".

எழுதியவர் : (5-May-15, 10:57 pm)
பார்வை : 113

மேலே