உண்மையும் பொய்யும்
எனது ..
உண்மைகளின் நிழலில்
ஒய்யாரமாய் ஓய்வெடுக்கும்
உனது
பொய் கூட
நீ ..
சொன்னதை
நம்பாது..!
"என்னை ..
பிடிக்கவில்லையாமே?"
இதே மாதிரி
இன்னொரு பொய்
சொல்லேன்..
உண்மையாகவே
கேட்கிறேன்..
உண்மையில்
அது
பொய்யாகவே
இருக்கட்டும் ..!