இயற்கையின் வளர்ப்பு பெண்

ஜன்னல் வழி ரயிலில் ஓளி தந்தாய்.
தென்னக் கீற்று காற்றில் கிறுக்கியது உன்முகத்தில்
அது கவிதைகள் ஆயின ,
கவிதையில் ஒரு புளங்காகிதம்,
அடைந்து கொண்டாய் ,
கீற்றுக்குள்.
மறுபடி ரயில் நகர்ந்து, நின்றது ஓரிடத்தில் ,
இம்முறை மூங்கில் கீற்று வருடியது , காற்றின் கைகளால்
கரு மேகம் கொண்டு மூடி கொண்டாய் , நாணத்தில் ..
இவ்வாறு இயற்கை எழுதிய கவிதையை ,
உன்னை பார்த்து ஏங்குவோருக்கு தருகிறாயோ,
பொழுது விடிந்து கொண்டு இருந்தது ,
நீ மறைகிறாய் , பார்வையில் ,
பதிகிறாய் இதயத்தில், கவிதையாய்...

எழுதியவர் : பூபாலன் (6-May-15, 9:29 am)
பார்வை : 123

மேலே