கோபம்

நீர்...,
தாகம் தீர்க்கும் தண்ணீர்
தாலி அறுக்கும் சுனாமி...,

நிலம்
விதையும் விளைக்கும் அரிசி
வெடித்தால் வாய்க்கு அரிசி...,

ஆகாயம்
மழைத்துளி உயிர்த்துளி
இடிதுளி உயிர்பலி...,

காற்று
பனித்துளி தூவும் தென்றல் வீசும்
பயங்கர காற்று மண் நாசம்...,

நெருப்பு
இரவில் மெழுகு இதழ் இன்பம்
வெடித்து உருகும் எரிமலை துன்பம்

அகிலம் காக்கும் ஐம்பூதம்
அகிலம் அழிக்கும் ஒருபூதம்
கோபம்... கோபம்... கோபம்...

எழுதியவர் : கிருஷ்ணா (6-May-15, 6:45 pm)
Tanglish : kopam
பார்வை : 161

மேலே