காதல் வலி

சொற்களிலே நீ
முத்தெடுத்து
அற்புதமாய் ஓர்
சொர்க்கம் என்று
விட்ட கணை என்
நெஞ்சை கிழித்தவுடன்…
அக்கணமே
எனக்குள் பள்ளி வந்தாயோ ….!!
மாயக்கள்ளியே....!!
பிரமன்
உன் இதயத்திடம்
என் இருப்பிடம்
சொல்லிக் கொடுத்தானோ.....!
எப்படி களவாடுவது என்று …!!
காதல் வலி அறியா
கயவன் அவன்
பாடம் படிக்க
என் இதயம்
உந்தன் இருப்பிடமோ…!!
காதல் வலி …
இது காதலின் ஒரு பாதி …!
அறியா அவனுக்கு
காதலும் ஒரு கேடுதான் …!!
அவனிடம் சென்று
சொல்லு – துணிவிருந்தால்
அவணியில் வந்து
காதல் செய்து
பாரு என்று …!!