எனதினிய கண்ணீரே …

எண்ணி துணிந்து விட்டேன்
எந்தன் மனமே …
இனி தடையில்லை
என்றுமே ஜெயமே ……!
கண்ணுக்குள் எழுந்திடும்
கண்ணீர் அது இன்றெனக்
உரைத்தது நிஜமே …!

அகிலத்தில் ஆயிரம் உயிர்கள் இதில்
நிலம் என்ன நீர் என்ன வேறா
இயலாமைதான் இந்த கண்ணீர் இனி
முயற்சிகொள் ஆனந்த கண்ணீர் …!

தோல்வியிலே வரும் கண்ணீர் இனி
தோற்காமல் வெற்றிகொள் என்னும் …
வாட்டத்தை போக்கிடும் கண்ணீர் நீ
வாழ்ந்துகாட்டு ஆயிரம் கண்ணீர் …!

அர்த்தத்தோடு சிந்து கண்ணீர்
அது உத்தமனாக்கிடும் உன்னை
வேசத்துக்கு சிந்தும் கண்ணீர்
உனை விரயமாகிடும் மண்ணில் …!

அன்னை சிந்தும் கண்ணீர் அது
பெற்றதன் பெருமையில் வந்தாலே பிள்ளை
மண்ணில் உனக்கென்று கண்ணீர் நீ
வாழ்ந்ததன் அர்த்தத்தில் வந்தாலே மனிதன் …!

கண்ணீர் சிந்தும் மனமே இனி
சிந்தும் பொழுதில் கொஞ்சம் கவனி
விண்ணும் சிந்துதே கண்ணீர் அது
தனக்கென்று சிந்துதா இன்னும் யோசி ….!!

எழுதியவர் : வீகே (7-May-15, 12:29 pm)
சேர்த்தது : விஜய்குமார்
பார்வை : 92

மேலே