அமைதியாக ரசித்துபார்

இயற்கை
அமைதியாக ரசித்தால் ஆயிரம் ஆனந்தம்!
அதிகாலை 'பனி துளி'
பரிசுத்தத்தின் உச்சம் !
அடுத்தது 'பகலவனின்' உதயம் ,
உலகத்தின் மாபெரும் சக்தியை
நமது சாதாரண கண்கள் பார்க்கும் நேரம் அதுதான் ..........
கதிரவனை பார்த்த மலர்கள் மலர்வது
நம் கண்களுக்கு பேரானந்தம்!
மலர்களை தழுவ வரும் வண்டின் ரிங்காரம்,
நமக்கு ஒரு 'ஒளி ஒலி'உருவகாட்சி..............
வானத்து முகில்கள் சொல்லும் நமது
வாழ்கை தத்துவத்தை - பிறருக்காக வாழவேண்டும் என்று !
இப்படி கண்கள் ரசிக்கும் இயற்கையில்
கருத்துகள் ஆயிரம் ...........அமைதியாக ரசித்தால் ஆனந்தம் ஆயிரம் ...........
என்றும் அன்புடன்
அ.மனிமுருகன்