படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - அன்புள்ள அப்பா அப்பா

நோயுற்ற அம்மாவையும், சிறுமியாக என்னையும்
சோகத்தில் ஆழ்த்தி விட்டு நீங்கள்
அயல் நாட்டு வேலைக்காக சென்று
ஆண்டுகள் பத்து முடிந்தது . அப்பா !

*******************************************************************************

எப்போது வருவீர்கள் என்று தினம்
இந்த ஓடக் கரையினில் நான்..
இசைக்கின்ற கீதம் ..கடக்கட்டும் கடல்களை
எட்டட்டும் உங்கள் அன்பு இதயத்தை !

*******************************************************************************

எங்களுக்கு சோறு போடும் இசை
என்றேனும் சேர்க்காதா எங்களை உங்களுடன்
ஓடங்கள் ஒவ்வொன்றும் திரும்புகின்றன
ஒன்றிலும் உங்களைக் காணவில்லை !

*******************************************************************************
தேய்பிறை நிலவாய் ஆகிறேன்.. தினம் !
ஓடக்கரையினில் கீதம் இசைத்தபடி
என்றைக்காவது ஒரு நாள் வருவீர்கள்
என்ற நம்பிக்கை குறையாமல்..நான் !

*******************************************************************************

அம்மாவால் பார்க்க முடியாது என்றாலும்
எனக்குப் படிக்கத் தெரியாது என்றாலும்
இருக்கிறேன் உயிரோடு என்று தகவல்
அனுப்புங்கள்..அது போதும் எங்களுக்கு !

*******************************************************************************
அது வரையில்..தினம் தினம்
வந்து இசைப்பேன் ஓடக் கரையில்
உங்கள் வரவை வேண்டி நாளும்
நம்பிக்கையோடு ஒரு இனிய கீதம்!

********************************************************************************

மேற்கண்ட கவிதை எனது சொந்த படைப்பு என்பதை உறுதிப்படுத்துகிறேன்..
ச.கருணாநிதி.
கைப்பேசி எண்: 9443303407

எழுதியவர் : கருணா (8-May-15, 10:13 am)
பார்வை : 329

மேலே