குழிப் பணியாரமும் கருப்பட்டி அடையும்

கொஞ்ச நேரமாகவே
தேங்காய் துருவும் சத்தம்...
சமையலறை சங்கீதமாய்..
மல்லி மிளகாய் இஞ்சி பூண்டு
மிளகு கறிவேப்பிலை
இத்யாதிகள் வதங்கும்
செட்டிநாடு சமையல் வாசம்...
மகள் கேட்டாள் என்று
ரொம்ப நாட்களுக்கப்புறம்
குட்டி உருளை வருவலும்
குழிப் பணியாரமும்
கருப்பட்டி அடையும் தயார் ...

அப்பாவும் மகளும் வாங்க..
அம்மாவின் அழைப்பு..
மசாலா இப்போதெல்லாம்
எனக்கு சேருவதில்லை
அம்மாவின் விளக்கம்..

இதெல்லாம் அவனுக்கு
ரொம்பவும் பிடிச்சது
வெளியூரில் என்னத்த
சாப்பிட்டு நாள் கடத்தரானோ ?
மகனை நினைத்தபடியே
பழைய சோறில் மோர்
கரைத்தாள் அம்மா....

.

எழுதியவர் : ஜி ராஜன் (8-May-15, 10:56 am)
பார்வை : 114

சிறந்த கவிதைகள்

மேலே