படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - காதல்

வருவாயா? நீ வருவாயா?

தேர்ந்தெடுத்தேன்! தேர்ந்தெடுத்தேன்!
தோற் கருவியை அல்ல!
துளைக் கருவியை அல்ல!
கஞ்சக் கருவியை அல்ல!
நரம்புக் கருவியாம் வயலினை ...

தெரிந்துகொண்டேன்! தெரிந்துகொண்டேன்!
எண்ணற்ற வாத்தியங்களிருக்க - என்
எண்ணங்களின் போக்கின்படி ...
எண் வகை மெய்ப்படுகளையும்
இதமாக இசைக்கலாம் வயலின் என்று..

இசைத்தேன்! இசைத்தேன்!
இதயத்தில் இழையோடிய எண்ணங்களின் ஏக்கங்களை...

காத்திருப்பேன்! காத்திருப்பேன்!
காலம் கனியும் வரை ...
இதயத்தின் இதம் கண்டுகொண்டு ...
வருவாயா? நீ ... வருவாயா?

எழுதியவர் : ஆ.ஷைலா ஹெலின் (8-May-15, 10:20 am)
பார்வை : 109

மேலே