படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை – ஒரு கவிதை காத்திருக்கிறது
![](https://eluthu.com/images/loading.gif)
வழிப்போக்கனாய் வந்த
உன்னுடன் போக
முடிவெடுத்த என்னை
காத்திருக்கச் சொல்லி
உன் ஒரே உடைமையான
வயலினையும் பரிசளித்துசென்ற
உனக்காக காத்திருக்கிறேன்.
அவிழ்ந்திருக்கும் என் கூந்தலில்
நீ வந்து மலர்முடிப்பாயென
வசந்தத்தின் வாசலில் காத்திருக்கிறேன்
எனக்கான பாடல்களை இசைக்கப்போகும்
உன் வயலினை
மடியினில் சுமந்து காத்திருக்கிறேன்.
என்னுடன் நீ கைகோர்க்கும் நாளில்
உன் பாதம் தொடரும் என் பாதம்