படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை -யார் இவள்

இரக்கமில்லா இவ்வுலகில் பெற்றோரை இழந்து
தவிக்கும் பெண் இவளோ - இல்லை
திறமைகளை சுமந்து கொண்டு வாய்ப்புகள்
தேடி அலையும் பெண் இவளோ
இல்லை துணிவோடு வாழும் பெண்ணினத்தில்
பணிவோடு வாழும் பெண் இவளோ
இல்லை உள்ளம் பாரது உடலை
விரும்பும் கயவர்களை கண்டு வாழ
மறுக்கும் பெண் இவளோ - இல்லை
வயலின் கொண்டே உலகினை வெல்ல
வான்வழி வந்த பெண் இவளோ
இல்லை அழகிய பாதம் அதை
நிலமும் முத்தமிட காலணி அணியாது
வாழும் புது பெண் இவளோ
இல்லை கணவனை இழந்து அழகினை
துறந்து வாழும் பெண் இவளோ
இல்லை காதலை நம்பியே தினசரி
வெம்பி ஏமாற்றம் கண்ட பெண்இவளோ
இல்லை நல்லவர் என பாரது
கெட்டவர் என பாரது ஒத்த
நிழலை தரும் மரத்தடி அருகே
உட்கார்ந்து வாழ்வே எண்ணும் பெண்இவளோ
தெரியவில்லை எனக்குஆனால் அவளிரு இமைகளில்
மட்டும் தெரிகிறது எதையோ இழந்த ஏக்கம்...................=>?