படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - தொடர்வோம் நட்பை வாழ்நாள் முழுதும்
பெண்ணே பெண்ணே ஏக்கம் ஏனோ!
==கண்ணில் இல்லை தூக்கம் தானோ!
உன்னில் கொண்ட துன்பம் என்ன?
==உண்மை சொன்னால் போகும் தூரம்..!
தந்தை என்றோ விட்டுப் போனார்!
==தாயும் கூட சொர்க்கம் போனார்!
சோகம் போக்க இசையைக் கற்றேன்!
==மேகம் பார்த்து மகிழ்ச்சி பெற்றேன்!
சின்னப் பெண்ணே! சித்திரக் கண்ணே!
==சிரமம் எல்லாம் சீக்கிரம் தீரும்!
வண்ணம் ஆக்கும் வானவில் போல
==வாழ்வில் வர்ணம் வசந்தம் ஆக்கும்!
இனிய மழையாய் இன்மொழி பொழிந்தாய்!
==இதயம் மகிழ இன்சொல் உரைத்தாய்!
இனிமேல் வாழ்வில் வெளிச்சம் வரவே
==இருப்பாய் நீயும் நட்பாய் உறவே!
சரிதான் தோழி! சரித்திரம் படைப்போம்!
==சமத்துவம் வளர்த்தே தரித்திரம் துடைப்போம்!
வருவான் உனக்காய் மணமகன் நாளை
==தருவான் அழகாய் திருமண மாலை!
அன்புத் தோழா! அகமகிழ்ந்தேன் நான்!
==உன்னில் கண்டேன் தாய்தந்தையைத் தான்!
தோழா! ஒருவன் துணைவி ஆனாலும்
==தொடர்வோம் நட்பை வாழ்நாள் முழுதும்...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
