அங்கு ஒன்று இருந்தது
அப்போது
அங்கு ஒன்று
இருந்தது.
பிறகு
அங்கு ஒன்று
அசைந்தது.
அதன் பிறகு
அங்கு ஒரு காகித உருண்டை
அசைந்தது.
அதன் பிறகு
அங்கு ஒரு பறவை
அமர்ந்திருந்தது.
அதற்கப்புறம்
அங்கு ஒரு புறா
அமர்ந்திருந்தது.
அப்புறம்
அங்கு ஒன்றுமே இல்லை.
பேசாமல் நான்
தூரமாகவே இருந்திருக்கலாம்.
--கனா காண்பவன்