எந்தையே ஏகுகவே

எந்தையே..! ஏகுகவே ..!

விந்தைகள் புரியவேண்டி நாளும்
உலக
சந்தைக்குள் வெறி கொண்டோடும்
ஆட்டு
மந்தை போல் மக்கள் கூட்டம்
நேயப்
பந்தையே உதைக்கும் ஆட்டம் கண்டுமே
கந்தையாகி கதறிடும் நெஞ்சம் கனிய
எந்தையே..! ஏகுகவே என்னுள் எப்போதும்.

எழுதியவர் : இராக. உதய சூரியன். (9-May-15, 9:58 pm)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 60

மேலே