பிறந்த நாள்.
பிறிதோர் காரியம் கருதியே
அவனியில் நாம் பிறந்தோம்.
ஆயினும் அதனை மறந்தோம்;
ஆதலினால் இருந்தும் இறந்தோம்!
மறந்த காரியம் நினைவில் சுரந்தபோதுதான்
இறந்த நிலையைத் துறந்தோம்.
அரிதோர் காரியம் ஆற்றவே வந்த நாம்,
அறியாமை கொண்டு அவதியே உற்றோம்.
அறியும் ஆவல் நம் உள்ளத்தில் விரியும் நாளே,
நாம் அகிலத்தில் உண்மையாய் பிறந்த நாளாம்.
நம் உளத்தில் நம் இலட்சியம் பிறந்த நாளே
நமது பிறந்த நாளென அறிவாயோ நண்பா.?
பாலு குருசுவாமி