இன்னும் இருக்கிறது- பிளஸ் டூ தேர்வு முடிவை முன்னிட்டு

கிட்டிப்புள் விளையாட்டில்
பலமுறை தோற்றவன்
கிரிக்கெட்டில் முதல் முறையே
ஜெயிக்கலாம்... !
கிட்டிப்புள்ளில் தோற்றது
நினைத்தாலே இனிக்கிறது.

கோலம் முயன்று
கோட்டை விட்டவள்
ராக்கெட் செலுத்தலாம்
ஶ்ரீஹரி கோட்டாவில்... !
கோட்டை விட்டது
குதூகலம் தருகிறது.. !

பிளஸ் டூ தேர்வில்
தேறாமல் போகலாம்.
அஃதோர் இனிமையாய்
அப்புறம் ஆகலாம்..
உள்ளம் தளராதே
உயரலாம்; கலங்காதே..... !

எழுதியவர் : அருணை ஜெயசீலி (11-May-15, 3:10 pm)
பார்வை : 105

மேலே