நீயே சாமி …

விளைச்சலில் சோறு காணும்
மானிடதெய்வம் நீயே …!
களைப்பின்றி நெற்றி நீரில்
தினம் உந்தன் சேவை கோடி ….!

விதைக்கின்ற விதையினுள்ளே
விருட்சத்தை கொடுப்பாய் நீயே …!
உனகென்று சோர்வு நோக்கின்
நமக்கில்லை சோறுதானே …!

ஏசியிலே காசு காணும்
மாசுபட்ட நெஞ்சங்களுக்கு - நீ
ஏர் பூட்டி உழுதாலன்றில்
ஏசி என்ன ஓசி என்ன …!

சாமியும் சாப்பிட்டால்தான்
பூமியே விளையுமென்று
நீ சிந்தும் வேதனையில் …
பீசா என்ன பர்கர் என்ன....
எல்லாமே உன் உழைப்பே …!

நம் உயிர் அதை நீ உழைக்க
அவ்வுயிருக்காய் நாம் அலைய
இடையினில் பணம் வந்து
உன் வீட்டினில் பழைய சோறு …!

ஊருக்காய் சொத்து கொண்டு
கார் மழைக்காய் தவமிருந்து
பேர் சொல்லும் உன் சேயும் கூட
படிப்பின்றி உன்னோடு …!

பார் எல்லாம் இயங்கிடவே
நீ வேண்டும் கடவுளாய் ….!
யார் இதை எண்ணக்கூடும்
அவர் கையில் சோறு இருக்கே ….!

ஒரு நொடி நீ ஓய்ந்தாலே
உலகமே வாடி மாயும்...!
விளைநிலமாய் உயிர்களையும்
காப்பவன் நீயே சாமி …!!

எழுதியவர் : வீ கே (11-May-15, 3:29 pm)
பார்வை : 105

மேலே