ஏமாளி

வாங்கிய கடனை
செலுத்தாதீர்கள் என்றார்கள்
சட்டத்திற்கு பயந்து
சரியாக செலுத்தினேன்
செலுத்தாதவர்களுக்கெல்லாம்
தள்ளுபடி செய்தது அரசு

அரசு புறம்போக்கில்
குடிசை கட்ட அழைத்தார்கள்
சட்டத்திற்கு பயந்து
மாட்டேன் என்றேன்
பயப்படாதவர்களுக்கெல்லாம்
பட்டா கொடுத்தது அரசு

இப்பொழுது
பக்கத்து ஊருக்கு
கள்ள ஓட்டுப்
போடக் கூப்பிடுகிறார்கள்
சட்டத்திற்கு பயந்து
போகாமல் இருந்தால்
அடுத்தாண்டு
நல்ல் ஓட்டும்
இல்லாமல் போய்விடுமோ
-

எழுதியவர் : கொ.வை. அரங்கநாதன் (12-May-15, 8:50 am)
சேர்த்தது : கொவைஅரங்கநாதன்
Tanglish : yemali
பார்வை : 220

மேலே