மீனவன் கடத்தல் காரனா

மீனவன் கடத்தல் காரனா???
நில அபகரிப்பாலும்
மீத்தேன் திட்டத்தாலும்
விவசாய முதலாளிகளை
கைக்கூலியாக்க துடிக்கும்
ஜனதாவின் நாயகனே!
எல்லை தாண்டும்
மீனவனுக்கு பொறுப்பேற்க
முடியாதுன்னா - ஆனி புடுங்கவா
ஆட்சி நடத்துற!
கார்பரேட் கடத்தல்
காரனுடன் கைகோற்கும்
கயவர்களே உழைத்து
உண்பவனை வசைபாட
என்ன தகுதி உனக்கு??!
மீனவனின் உயிர்
காக்க திராணியற்ற
அரசுகளே உங்களின்
கூட்டு களவாணித்தனத்திற்கு
மீனவன் கடத்தல் காரனா???
இப்படி அச்சுறுத்தி
நிர்கதியாக்கி
மீன் வளத்தையும்
பெருமுதலாளிகளிடம்
ஒப்படைக்கும் திட்டமா????
உண்மையில் நீங்கள்
ஆட்சியாளர்களா??
இல்லை
கார்பரேட்டில்
கூலிக்கு ஆள் எடுக்கும்
HR ஏஜன்டுகளா???!
எம் விளைநிலங்களையும்
விலைமதிப்பற்ற
வளங்களையும்
அழித்து ஆக்கும்
வேலைவாய்ப்பில்
அண்டிப்பிழைக்க யாம்
அகதிகள் அல்ல
மண்ணின் மானத்தை
காக்க விரைவில்
வேங்கையாய் வெளிப்படுவோம்
உம் முயற்சிகளின்
முற்றுப்புள்ளியென முழங்க.
#red