நீதிக்கு கண்ணீர் அஞ்சலி

நீதிக்கு கண்ணீர் அஞ்சலி!!
ஆர்பாட்டம் அவசியந்தானா??
இன்று
முல்லை பெரியாறு ஏற்க்கப்பட்டதா?
மேகதாது அணை தடுக்கப்பட்டதா?
கச்சத் தீவு மீட்க்கப்பட்டதா?
மீனவர்கள் காக்கப்பட்டனரா?
அனுஉலை திட்டம் கைவிடப்பட்டனவா?
நில அபகரிப்பு நிராகரிக்கப்பட்டதா?
கனவு ஈழம் மலர்ந்துள்ளதா?
அல்லது குறைந்தபட்சம்
இன அழிப்புக்குத்தான்
நீதி கிடைத்ததா????
உன்னையும் என்னையும்
ஏமாற்றி வரிப்பணத்தை
திருடிதிண்ணு கொழுத்தவர்கள்!
இருபது உறவுகள்
கொலையினிலே மவுனம்
சாதித்த சகுனிகள்!
இனக்கொலையின் விளிம்பில்
சண்டையில் சட்டை கிழிவது
சகஜம் எனும் சாகசபேச்சுக்கு
சொந்தக்காரர்கள்!
நடந்தது
சத்யாகிரக வழக்கா?
சொத்துக்குவிப்பு வழக்குதானே!
இதற்கு ஆர்பரிக்கும்
ஆர்பாட்டம் அவசியம்தானா??
நம் நீதிக்கு
பல அரச கதைகளும்
பறைசாற்றும் - பக்குவம்
உடையவர்கள்
தமிழினமே
தாழ்ந்து விடாதே!
களவுபோன நீதியின்
உறக்கம் என்று கலையுமோ!!!
காத்திருப்போம்!
நிச்சயம் விடியும்
அநீதி மடியும்!!
நாம் ஒன்றுபட்டால்
விரைவில் முடியும்!
#red