குலமகள்

பெண் பூமிக்கு பாரம் அல்ல
பாரங்கள் தன் தலையில் சுமப்பவள்
அவளும் பூமிக்கு சமம்
குடும்ப சுமை குழந்தை சுமை
பொறுமை சுமை பொத்தி வைப்பாள்
மனதினில் போர்வையாய் தானிருப்பாள்
இடி போல பாரங்கள் இறங்கியே வந்திடினும்
இணங்கியே தாங்கிடுவாள் பெண்ணவள்
இஸ்டம் இன்றி வந்துவிழும் வார்த்தைகள்
அவள் மனதை சுக்கு நூறாக்கிடினும்
கண்ணீரால் கரைத்திடுவாள் கவலைகளை
இத்தகைய பெண்ணே பூமிக்கு சமம்
பட்டினி தான் கிடந்திடனும் வெளித் தோற்றம்
மறைத்திடுவாள் தன்மானம் கொண்ட பெண்
சற்றேனும் குறையாத கௌவரம் காத்து நிற்பாள்
கலியுகத்திலும் அந்தப் பெண்
பெண் என்றால் இம்மட்டே என்றுணரா
மகத்துவத்தைக் காட்டிடுவாள்
மானமே பெரிதென்று சொல்லாமல் சொல்லிடுவாள்
குலம் காக்கும் குல மகளாம் குணம் கொண்ட பெண்

எழுதியவர் : பாத்திமா மலர் (13-May-15, 1:59 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kulamagal
பார்வை : 79

மேலே