தண்டனை கைதி

எதிர்கொள்வேன் எதையும் என்றாயே அன்று
இறப்பையும் தாங்கும் இதயம் உண்டென்று
என்னாயிற்று இன்று வா வா நேரமாயிற்று
இழுத்தான் காவலாளி தர தரவென்று

அழுதான் ஓவென ! தொழுதான் தூக்குக் கைதி
என்னால் முடியாது முடியவே முடியாது
என்றுமே முடியாது என்றான் கைதி
ஆர்பாட்டம்! அமர்க்களம் ! அம்மாடி !

என்னை விடுங்கள்! வேண்டினான் கைதி
ஆகாது ! ஆகாது !வா ! வா ! இது அதிகாரி
அரை மணி தானே ! இது எங்கள் விதி !
அனுபவி! என் செய்ய !உன் தலை விதி !

இழுத்து சென்றனர் எல்லோருமாய் கைதியை
கழுத்து தொங்கி கண் தாழ்த்தி சென்றதாய் செய்தி
மாதம் ஒரு முறை சிறையில் பார்வை நேரம் !
மனைவியை அன்று அவன் பார்க்க வேண்டும் !

/ Inspired by a joke read in Web !/

எழுதியவர் : முரளி (13-May-15, 1:54 pm)
Tanglish : thandanai kaithi
பார்வை : 93

மேலே