பல்துலக்குறீங்களா

ஒருவார காய்சல்
ஓயாத இருமல்
ஒருவழியாக
மருத்துவமனை
வந்தாயிற்று... !

மருத்துவ சோதனைக்குபின்
மருத்துவர் வினவினார்
மது பழக்கம்
மற்றும் சிகரெட்..
வேறு ஏதுமுண்டா ?
இல்லையென்றேன்...

அப்ப தினமும்
பேஸ்டால...
பல்துலக்குறீங்களா ?

அனேக அதிர்ச்சியுடன்
வீடு வந்தேன்...

மகள் பாடம் ...
படித்துக்கொண்டிருந்தாள்
ஆலும்...வேலும்...
பல்லுக்குறிதியென்று...!!
-----------------------------------------------------------------
(முகநூல் வழி செய்தி, நிகோடின் அளவு சிகரெட்டை விட பேஸ்டில் அதிகமென்றும், பேஸ்டில் உள்ள ப்ஃளூரைடு உடலுக்கு மிகக் கேடானது என்றும் தகவல் )
------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (14-May-15, 11:16 am)
பார்வை : 304

மேலே