நீ வேண்டுமடா !
அன்பாய் பேசிட,
ஆதரவாய் பார்த்திட,
வாழ்க்கை
வெறுமையை உணர்த்தும் போது
நெற்றி பொட்டில் முத்தமிட்டு
நான் இருக்கிறான் என்று தைரியம் தந்திட,
சோர்வாய் நான் சரிந்திடும் போது
தோல் மீது தாங்கிட,
மீசை குத்தும் இன்பம்
என் கன்னங்கள் அறிந்திட,
வேலை பளுவால்
களைத்த என் தேகம்
இளைப்பாற
உன் மடி மீது தாலாட்டிட,
என் கால் கொளுசொசையைமாய்
ஆனந்தமாய் ரசித்திட,
நான் கலங்கினால் துடிக்கும் என் அன்னையாய்,
என்னை குழந்தையாய்
நினைக்கும் என் தந்தையாய்
என்றும் என் அருகில்
நீ வேண்டுமடா !