சுதர்மம் காக்க எழுந்தேன்

நண்டு வாழ்க்கை போதும்..

நீண்ட சமுத்திரமே...அந்த வெஞ்சங்கை மேலெலுப்பி,
உங்கள் முழுமையை திரட்டி ஊதி கொள்ளுங்கள்....

போர் முரசு கொட்டியாயிற்று...

முழு வெங்காயம் கண்ணில் பிழிந்தேன்..

இனி உறங்க கண் முனவாது...

உறுமாத புலியின் வேசம் எலியின் சாம்பலை ஒத்தது..

முக மயிர் பதித்த சிங்க ஜாடை,
ஈன குரங்கிற்கு சினுங்கவோ?

தலை தூக்கி வானம் காணாது மடியும் பன்றிக் கூட்டம்....

அதற்கு நேர் நிகர் வாழ்க்கை எனக்கு வேண்டா...

வீர வாசம் பழகாமல் என் குருதி வற்றாது

இச்சீமை தனில் எக்காலத்திலும் என் போல் வீரன் நிலவியதாக செய்தியும் இருக்காது...என்று நன்று அறிவீராக...

எனக்கென்ற இரக்க குணம் இருந்து போனதினால்,

மாயமே இந்நொடி வரை மண்ணில் நின் செறுக்கு ஓங்கி நிற்பது சாத்தியம் ஆயிற்று..

உம்மால் எம் தருமத்திற்கு இழுக்கு நேர்ந்ததால்,
நுங்கள் குரல் பைக்கு கெட்ட காலம் வாய்த்தது....

கண்ணா தேரை முன் நிறுத்து...
இனி இக்கயவர்கள் நின் மண்ணில் நிற்பது என் சுதர்மத்திற்கு ஆகாது...

எழுதியவர் : சிவசங்கர்.சி (15-May-15, 8:26 am)
பார்வை : 105

மேலே