நீதியும் நிதியும்
நிதி இருப்பவனுக்கு
நீதி கிடைக்கிறது
நிதி அற்றவனுக்கு
நீதி கிடைக்காமல் போகிறது
நிதி தலைமிர்ந்து நிற்கிறது
நீதி தலைகுனிந்து நிற்கிறது
நிதியை
நீதி வெல்லவேண்டுமானால்
நீயும் நானும்
நீதியின் வழியில் இருக்கவேண்டும்
நிதியின் வழியை தவிர்க்கவேண்டும் !