இறகு தைத்த நினைவுகள்

கருவுற்ற கடல்
கரையில் வந்து
வாந்தி எடுக்கிறது
அலை அலையாய்

-------------------------------

இரவெல்லாம் ஒத்திகை
ஒத்துழைக்கவில்லை
வாய் திறந்த பூக்கள்
வார்த்தை மறந்துவிட்டது

-------------------------------------
நதி துரத்துவதால்
நதி ஓடுகிறது

--------------------------------------

நிலமயிர் மேல்
பனித்துளி - புல்

-------------------------------------
நிலத்தின்
முடி திருத்தும்
சவரக்காரர்கள் - ஆடுகள்

--------------------------------------

பரிமாறப்படுமா
உலக உருண்டை - பொதுவுடைமை

-----------------------------------
நிலவுக் காவலில்
விழிமூடி தூங்குது வானம்
விழித்ததும் விடிந்திடும்

-------------------------------------
ஒரு பூவுக்கு
பல்இதழ்
பூவைக்கு ஏன்
ஓர்இதழ்

----------------------------------------

ஊர் தள்ளி வைத்தது
கலப்புத் திருமணம்
தண்டவாளங்களுக்குள்

----------------------------------------

வெளியில் அழும்
குழந்தையை நினைத்து
பால் சுரந்தால்
உள்ளிருக்கும் அன்னை
கல்லறையில் ஈரம்

---------------------------------------------
வழியோர குடிசைகளுக்கு
வழி தெரியவில்லையே
பணக்கார குப்பைகளில்
விழி இல்லா சோறு

--------------------------------------------

சுரண்டல்களால்
சுரக்காத மார்பு
வெறுமையை குடிக்கிறது
வறுமை

--------------------------------------------

புழுங்கி வியர்த்த
உழைப்பை
விழுங்கி வீங்கிய
பிழைப்பு - முதலாளித்துவம்

--------------------------------------------------
தன் நிகழ்காலத்தை
காட்டிய கிளியை
திட்டியபடி
எதிர்காலத்தை காட்டியது
கூண்டுக்கிளி

எழுதியவர் : Raymond (15-May-15, 4:12 pm)
பார்வை : 95

மேலே