நீ வேண்டும்
இரவில் உன்னுடன்
தொலைபேசியில் பேசும் போது
இரவில் ஏகாந்தம் காண்கிறேன் .........!
தொலைபேசியில் உன்னிடம்
ஆயிரம் வார்த்தை பேசினாலும்
நேரில் உன் இதழ் உதிர்க்கும்
ஒரு வார்த்தையை கேட்க என்மனம் அலைகிறது .....!
துறும் துரலில் என் தோலோடு சாய்ந்துகொண்டு
செல்ல நீ வேண்டும்....!
பிற பெண்களை பார்க்கும் போது
கத்திவிழி பார்வையால் தாக்க நீ வேண்டும்.....!
மழையில் நனைந்து வரும்போது
முந்தனையால் தலை துவட்ட
நீ வேண்டும்.......!
உன் அக்கறையால் என் தாயை அடிக்கடி
நினைவுபடுத்த நீ வேண்டும்.......!
என்னோடு தலையணை சண்டையிட வேண்டும்
என்னை செல்லமாக திட்ட நீ வேண்டும்
நம் மகளை திருமணம் செய்து தரும்போது
நான் கட்டியணைத்து அழ நீ வேண்டும்..........!
கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைதிட நானும்
கைகோர்த்து நடக்கும் காலத்தை
எதிர்நோக்கி காத்திருக்கிறேன்..............
நீ வேண்டும்...........
நீ வேண்டும்...........
என்னோடு வாழ நீ வேண்டும் ......................................!