கனவுக் குதிரைகள்
கனவுக் குதிரைகள்
கடந்திடும் ஆயிரமாயிரம் மைல்கள்!
நிதர்சன வாழ்க்கையோ
நிமிடங்களும் நொடிகளும்
யுகங்களாய் வளரும்
போராட்ட வாழ்க்கையில்
போர் அடிக்காது
முன்னேற்ற
நித்தமும் ஓடும்
நிறைவேறா ஆசைகளைத் தேடி
புதுப்பயணம் கனவுப் புரவிகளுடனே!