எழுத்துக் குளத்தில் குதித்த தவளை

எண்ணத்தில் உதித்தவற்றை
வண்ணத்தில் வரைவதென்ன
அத்தனை எளிதா
அதனால் தான்
எல்லோரையும்போல் எழுத்துப் பக்கம்
வந்தேன்
கவிஞர்களின் சொல்வண்ணம் கண்டு
வாயடைத்து நிற்கிறேன்
என்னைப்போல் பாட்டெழுதும்
எவரேனும் உள்ளனரா என்றுதான்
தேடுகிறேன்
நடை பயிலும் குழந்தை
தடுமாறும் போது
தாங்கிப் பிடிக்கும்
எழுத்துத தளம்
என்ற நம்பிக்கையோடு

எழுதியவர் : மயில் அமுது (21-May-15, 6:24 pm)
பார்வை : 152

மேலே