மரண வாக்குமூலம்
இது எனக்கு
புது மரணமில்லை
முன்னம் இதுபோலும்
நடந்திருக்கிறது.
அப்போதெல்லாம்
இப்படி உயிர் போகவில்லை...
கொஞ்சம் முன்னதாகவே
மரணம் வந்திருக்கிறது
உயிர் கொண்டுபோக.
இன்னுமோர்
இருபது வருடம்
நேர் / எதிர்மறைப் பெயரோடு
நான் நினைக்கப்படலாம்...
மரணத்துக்குப் பின்னுமாக வாழும்
நீண்டதொரு வாழ்வைத் தொலைத்த
என் கல்லறையில் எழுதுங்கள்...
~சக உயிர்களுக்கு
செய்ய மனமில்லாத
உடல்தானம்,
இப்போது தானாகவே
புழுப்பூச்சிகளுக்கு....~

