கடைக்கண் மரணங்கள்
காட்சிகள் தொடர்பறுந்து
கண்கள் வெறித்துவிடும்
இதயம் துடிப்படங்கி
உதிரத்தின் சுழற்சி நிற்கும்
உணர்வுகளின் தாக்கமின்றி
உடல் முற்றும் மரத்துவிடும்
கட்டுப்பாடில்லா சுரப்பிகள்
கடைவாய் வழிந்தொழுகும்
கேட்கும் திறனிழந்து
மௌனவெளி நிலைத்துவிடும்
அண்டவெளியில் ஆன்மா
அற்புதத்தில் கலந்துவிடும்
மரணத்தின் விதிமுறைகள்
இதுவென்று சொல்வீராயின்
அவள்
கடைக்கண் வீசும்
பார்வை நொடியனைத்தும்
மரணித்து மரணித்து
மறுபடி மீள்கின்றீர்