காதலின் தண்டனை !

அலை அடிக்க கரை ஒதுங்கும் -
கிளிஞ்சல்கள் போல்
என்னுள் அனல் அடித்தும்
உன் நினைவலைகள் தான் ரீங்காரமிடுகின்றன.

சொல்லி கேட்கவில்லை என் மனம்
சொர்ணமே உன் நிழல் தொடர்ந்தே வருகிறது என் ஆன்மா
அதை நீ அறிவாயா ?
மீண்டும் உன் கைகோர்த்து
நடக்க எனை அழைப்பாயா ?

மிருக வதை சட்டங்கள் மிகையாய் பேசப்படும் இந்த நாட்டில்..
மின்னல்கள் என் நெஞ்சில் பாய்ச்சி எனை மிச்சமின்றி கொன்று தின்று - துச்சமென்று தூக்கி எறிந்தவளே ...

உனக்களிக்க தூக்கை விட பெரிய தண்டனை உண்டா ? தேடிப்பார்க்கிறேன் சட்டத்தில்..

ஆனால் அதுவும் என்னால் முடியாது
இதை விட தண்டனை மிகை ஏது ?

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (7-May-11, 7:52 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 581

மேலே