அந்த ஒரு வார்த்தை..............!!
தூரத்தில் அவள்வருகிறாள்
நான் பரவசமடைகிறேன்
என்நாக்கால் உலர்ந்த என்
உதடுகளை ஈரப்படுத்திக்கொள்கிறேன்
என்பின்பக்க பாக்கெட்டில்
இருக்கும் அந்தசீப்பினை
எடுத்துமுன்பே பலமுறைவாரி
இருந்தும் கலையாமல் இருக்கும் அந்ததலைமுடிகளை
மீண்டும் வாரிக்கொள்கிறேன்
கைக்குட்டையை எடுத்து
முகத்தை அழுந்தத்துடைத்துக்
கொள்கிறேன் வியர்த்ததா என்றுகூடத்
தெரியாமல்.........
இதோ நெருங்கி விட்டாள்என்னை
என்னிடம் ஏதோ பேசுவதற்கு
தன் இதழ்களை அசைக்கிறாள்
நான் என்காதுகளை
கூர்மையாக்கிக் கொள்கிறேன்
ஆனால் என்காதில் விழுந்தவார்த்தைகள்
"மூதேவி! இன்னும் என்னடா தூக்கம்?"
என்ற என்அன்னையின் குரல்தான்
தற்போது உண்மையில்
என் முகத்தை அழுந்தத்
துடைத்துக் கொள்கிறேன்,
கனவிலும் அவள் குரலை
கேட்க முடியவில்லை
என்ற வருத்தத்தில்!!