பழைய சோறு

கடைதெருவில்
நீ...
நிற்பதை பார்த்து
என் நண்பன்
என் காதில் சொல்ல...
மிதிவண்டியை மின்னல்
வேகத்தில்
ஓட்டிக்கொண்டு
கடையருகில் -நான்
நிற்க!!!!!
சிரித்துகொண்டே
இருக்கும் பொருளையெல்லாம்
நீ கேட்டு வாங்கி கொண்டிருக்க...
இல்லாத பொருளையெல்லாம்
நான்
கேட்டுகொண்டிருக்க
பழைய சோறு இப்பொழுது இனிக்கிறதே......