ஈஸ்வரனே நீ வாழ்க

எனக்கென ஒருவன் இருந்தான்
அவனும் தொலைவினில் பறந்தான்...!
அவனிடம் இல்லை சூது
பழகிவிட்டால் அவன் சாது...!

கனவுகள் சுமந்து,கடல்களை கடந்து
உழைக்கச் செல்கின்றான்...!
உன் கனவுகள் யாவும் நிறைவேற
அகத்தியா வாழ்த்து சொல்கின்றான்...!

கோபம் வந்தால் கொதிப்பான்
பாசம் வைத்தால் மதிப்பான்...!
ஈசன் பெயரை கொண்ட
ஈஸ்வரனே நீ வாழ்க.....!!!


குறிப்பு : இந்த எழுத்து தளத்தில் எனக்கு கிடைத்த அற்புத உறவு
ஈஸ்வர் அண்ணாவுக்கு இந்த கவிதை அர்ப்பணம்....

எழுதியவர் : அகத்தியா (28-May-15, 11:15 am)
பார்வை : 244

மேலே