அடம்
பாலுக்கு ஏங்காத பூனை இருக்குமா?
இருக்குமே என்பாய் !
மேற்கொண்டு நிரூபிக்கவும் பார்ப்பாய் !
உன் செயல்களை உணர்ந்துகொண்டு,
நீ என்னை காதலிக்கிறாய் என்றால்,
ஒத்துக்கொள்ள முழுதும் மறுப்பாய் !
சரி இனி என்னை தேடாதே !
என சொல்ல முற்படும் நாக்கு !
என்றாலும் நிறுத்திக்கொள்வேன் !
நான் நீயாகிவிடக்கூடாது என்ற முனைப்பில் !!